மீண்டும் ‘மீகாமன்’ டீம்!

மீண்டும் ‘மீகாமன்’ டீம்!

செய்திகள் 9-Jan-2015 10:39 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் பரவலான வரவேற்பு பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் நன்றாக பேசப்பட்ட படம் ‘மீகாமன்’. மகிழ்திருமேனி இயக்கிய இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் ஆர்யாவும், மகிழ்தி ருமேனியும் இணைய இருக்கிறார்கள். ‘மீகாமன்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே மகிழ் திருமேனி ஆர்யாவிடம் அதிரடி ஆக்‌ஷன் கதை ஒன்றை சொல்லியிருந்தாராம். அந்த கதை அர்யாவுக்கு பிடித்திருப்பதால் அதனை பண்ணலாம் என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார்களாம். இப்போது ஆர்யா நடித்து வரும் ‘புறம்போக்கு’, ‘யட்சன்’, ‘வாசுவும் சாரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;