வருகிறது ‘காக்கி சட்டை’ டிரைலர்!

வருகிறது ‘காக்கி சட்டை’ டிரைலர்!

செய்திகள் 9-Jan-2015 10:13 AM IST Chandru கருத்துக்கள்

‘எதிர்நீச்சல்’ டீமின் அடுத்த படைப்பான ‘காக்கி சட்டை’ படம் பரபரப்பாக தயாராகி வருகிறது. அனிருத்தின் இசையமைப்பில் உருவான பாடல்களும், ‘காக்கி சட்டை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டிரைலரை வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘காக்கி சட்டை’ படத்தின் டிரைலரை உருவாக்கும் பணி சென்னை டி.நகரிலுள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பிஸியாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி, வித்யுலேகா ராமன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவருடன் இணைந்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரும் திரைக்கதை அமைக்கும் பணியை கவனித்துள்ளார். தனுஷின் ‘வுண்டபர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அனிருத் லைவ் கான்செர்ட் 2015


;