திரைப்படமாகும் சச்சின் வாழ்க்கை!

திரைப்படமாகும் சச்சின் வாழ்க்கை!

செய்திகள் 8-Jan-2015 4:41 PM IST VRC கருத்துக்கள்

‘இந்திய கிரிக்கெட்டின் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் சச்சின் டென்டுல்கர் பற்றி திரைப்படம் உருவாகிறது. சச்சின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் இப்போது திரைப்படமும் உருவாகிறது. சச்சின் சம்பந்தப்பட்ட வியாபார விஷயங்களை கையாண்டு வரும் World Sports Group நிறுவனத்திற்காக இப்படத்தை தயாரித்து கொடுக்கும் பொறுப்பினை மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல விளம்பர பட நிறுவனமான ‘200 Not Out’ என்ற நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பினை லண்டனை சேர்ந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜேம்ஸ் எர்ஸ்கைல் ஏற்றுள்ளார்,. இவர் விளையாட்டு சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களை உருவாக்கி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சச்சினை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அத்துடன் பாலிவுட்டை சேர்ந்த பலர் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். கடந்த ஒரு வருட காலமாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து முடிந்துள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சச்சினை அவதூறாக பேசிய RJ பாலாஜி - வீடியோ


;