கேரளாவில் ‘பூஜை’ வசூலை மிஞ்சுமா ஆம்பள?

கேரளாவில் ‘பூஜை’ வசூலை மிஞ்சுமா ஆம்பள?

செய்திகள் 8-Jan-2015 3:22 PM IST VRC கருத்துக்கள்

‘‘தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது கேரளாவிலும் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான என்னோட ‘பூஜை’ படம் இங்கு 2.7 கோடி ரூபாய் வசூலித்தது. இது எனக்கு கேரள ரசிகர்களின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறியுள்ளார் விஷால்! நேற்று கேரளா - கொச்சியில் நடந்த ‘ஆம்பள’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் தான் விஷால் இப்படி பேசினார்! விஷால் தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்’ சார்பில் தயாரித்து நடித்துள்ள நான்காவது படம் ‘ஆம்பள’. சுந்தர்.சி. இயக்கியுள்ள இப்படம் தமிழகத்தில் வெளியாகும் அன்றே கேரளாவிலும் வெளியாகவிருக்கிறது. கேரளாவில் விஷாலின் ‘பூஜை’ படம் ஈட்டிய வசூலை விட விஷாலின் ‘ஆம்பள’ வசூல் செய்யுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;