போட்டிக்கு தயாராகும் ஜீவா அணி!

போட்டிக்கு தயாராகும் ஜீவா அணி!

செய்திகள் 8-Jan-2015 1:59 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் CCL (Celebrity Cricket League) கிரிக்கெட் போட்டியின், இந்த வருட போட்டி வருகிற 10-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஷால் தலைமையில் ஆடி வந்த Chennai Rhinos அணிக்கு இந்த வருடம் நடிகர் ஜீவா தலைமையேற்றுள்ளார். ஜீவாவை கேப்டனாக கொண்ட இந்த அணியில் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரத், ரமணா, விக்ராந்த், போஸ் வெங்கட், பாலாஜி, ஷாம், சாந்தனு, சோனு பாலாஜி, அஷோக் செல்வன் உட்பட பலர் ஆட இருக்கின்றனர்.

வருகிற 10-ஆம் தேதி மும்பையில் துவங்கும் இந்த CCL கிரிக்கெட் போட்டியில், 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் Kerala Strickers அணியுடன் முதன் முதலாக மோதவிருக்கிறது சென்னை அணி! இதனை தொடர்ந்து 18-ஆம் தேதி பெங்களூருவில் நடக்கும் போட்டியில் Veer Marathi அணியுடன் மோதிவிட்டு, அடுத்ததாக 25-ஆம் தேதி அஹ்மதாபாத்தில் Mumbai Heroes அணியுடன் மோதவிருக்கிறது Chennai Rhinos அணி! இந்த போட்டியின் இறுதி ஆட்டம் வருகிற ஃபிப்ரவரி 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது.

முதல் ஆண்டு போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணி கடந்த 3 அண்டுகளாக நடந்த போட்டிகளில் தோல்வியையே சந்தித்தன! இந்த வருட போட்டி குறித்து Chennai Rhinos அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் நடிகர் ஜீவா கூறும்போது, ‘‘நடிகர் விஷால் அவர்கள் தான் சம்பந்தப்பட்ட சில வேலைகளில் பிசியாக இருப்பதால் இந்த வருடம் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை. இந்த வருடம் அந்த பொறுப்பு என்னிடம் வந்துள்ளது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் பலமான ஒரு டீம் அமைந்துள்ளது. முதல் ஆண்டு ஜெயித்ததை போல இந்த வருடம் நடக்கும் போட்டியில் சென்னை அணி ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது. அதற்காக தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நடிகர் விஷால் அவர்கள் கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லையே தவிர அவரும் இப்போட்டியில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறார்’’ என்றார்.

அனுமதி பிரச்சனை காரணமாக இந்த வருடம் சென்னையில் இப்போட்டி நடைபெறவில்லை என்பதும், இப்போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சன் டி.வி. நிறுவனம் வாங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;