ஹாரிஸ் பிறந்தநாள்... அஜித், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

ஹாரிஸ் பிறந்தநாள்... அஜித், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

செய்திகள் 8-Jan-2015 10:21 AM IST Chandru கருத்துக்கள்

இன்று (ஜனவரி 8) இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள். 2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் கௌதம் மேனனால் திரையுலகில் அறிமுகமான ஹாரிஸ் இந்த 2015ஆம் ஆண்டின் முதல் ஆல்பமாக கௌதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களைத் தந்திருக்கிறார்.

தனது 14 வருட சினிமா பயணத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் தந்திருப்பது 40க்கும் குறைவான ஆல்பங்களே. ஆனால், இவற்றில் 25க்கும் மேற்பட்ட ஆல்பங்கள் சூப்பர்ஹிட்டானவை. இதுவே ஹாரிஸின் சிறப்பு. ஒவ்வொரு படத்தின் பாடல்களை உருவாக்குவதற்கும் நிறைய நேரங்கள் எடுத்துக்கொள்வார். தன் மனதுக்குப் பிடித்த சூழ்நிலைகளை தேடிச்சென்று அங்கேதான் அவர் பாடல்களுக்கான ட்யூன்களை உருவாக்குவார். ஹாரிஸின் இந்த ஒர்க்கிங் ஸ்டைலும் அவரின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த வருடத்தில் வெளிவந்த அவரின் ‘அனேகன்’ படப் பாடல்களும், இந்த வருடத்தின் முதல் ஆல்பமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களும் அஜித், தனுஷ் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அஜித்துடனும், தனுஷடனும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைவது இதுதான் முதல்முறை. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ‘தல’ ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் சமூக வலைதளங்களின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜிற்கு பிறந்தநாள் வாழத்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

ரசிகர்களோடு சேர்ந்து ‘டாப் 10 சினிமா’வும் ஹாரிஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;