முடியும் முன்பே சூடு பிடித்த ‘புலி’ வியாபாரம்!

முடியும் முன்பே சூடு பிடித்த ‘புலி’ வியாபாரம்!

செய்திகள் 7-Jan-2015 4:41 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘அரண்மனை’, ‘பிசாசு’ உட்பட பல படங்களை விநியோகம் செய்துள்ள ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ அடுத்து விஜய் நடிக்கும் ‘’புலி’ படத்தின் சென்னை மற்றும் NSC ( North ஆற்காடு, South ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியா உரிமையையும் வாங்கியுள்ளது. விஜய் நடித்த ’கத்தி’ படத்தை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ’புலி’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிவு பெறாத நிலையிலேயே இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி. ஏரியாக்களின் விநியோக உரிமையை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ உரிமையாளரும், மறைந்த இராம.நாராயணனின் மகனுமான முரளி கைப்பற்றியிருக்கிறார். இந்த தகவலை அவரே நமக்கு தெரிவித்தார். இந்த படம் தவிர வளர்ந்து வரும் ‘டிமான்டி காலனி’, ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘முனி கங்கா 3’ ஆகிய படங்களின் விநியோக உரிமையையும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ வாங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;