சிங்கம், சிங்கம் 2 வழியில் ‘மாஸ்’

சிங்கம், சிங்கம் 2 வழியில் ‘மாஸ்’

செய்திகள் 7-Jan-2015 3:59 PM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி, ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், குலுமணாலி, பல்கேரியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

பல்கேரியாவிலிருந்து திரும்பி வந்து பாண்டிச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி செல்லவிருக்கிறது வெங்கட்பிரபுவின் ‘மாஸ்’ டீம். இங்கு சூர்யா பங்குகொள்ளும் அறிமுகப் பாடல் ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம். ஏற்கெனவே சூர்யாவின் சூப்பர்ஹிட் படங்களான சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களில் இடம்பெற்ற அறிமுகப்பாடல்களும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;