‘ஐ’ படம் குறித்து விக்ரம் புதிய தகவல்கள்!

‘ஐ’ படம் குறித்து விக்ரம் புதிய தகவல்கள்!

செய்திகள் 7-Jan-2015 3:34 PM IST VRC கருத்துக்கள்

‘‘என்னுடைய சினிமா வாழ்க்கையில் ‘ஐ’ ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படம் தமிழ் படம் என்று சொல்வதை விட ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இப்படத்திற்காக 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறேன். என்னுடைய எடையை குறைக்க தான் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மூன்று மாதத்தில் 25 கிலோ எடையை குறைத்தேன். ஒவ்வொரு நாளும் 15 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணம், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் முழுக்க முழுக்க ’ஜிம்’மிலேயே பயிற்சி என கடுமையாக உழைத்து தான் எடையை குறைத்தேன். இதற்காக ஃபிசியோ தெராபிஸ்ட் மற்றும் டாக்டர்கள் அடங்கிய ஒரு குழுவே என்னுடன் இருந்தனர். இப்படி மூன்று மாத கடும் முயற்சிக்கு, பயிற்சிக்கு பிறகு குறைத்துக் கொண்ட எனது உடம்பை 9 மாதத்திற்கும் மேலாக அப்படியே பேணி காப்பதுதான் எனக்கு சவாலான விஷயமாக இருந்தது.

எனக்குத் தெரிந்து அதிகப்படியான பொருட்செலவில் செட் அமைத்து படமாக்கப்பட்ட படம் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படத்தில் சுரேஷ் கோபியும் முக்கியமான ஒரு ரோல் பண்ணியிருக்கிறார். அது என்ன ரோல் என்பது சஸ்பென்ஸ்! 3 வருட காலத்தில் குறைந்தது 9 படங்களிலாவது நடித்திருக்கலாம் என்றாலும் என்னை பொறுத்தவரையில் படத்தின் கதையிலும், தரத்திலும் தான் நான் கவனம் செலுத்துகிறேன். இயக்குனர் ஷங்கர் மாதிரி ஒரு பெர்ஃபெக்‌ஷனிஸ்டை பார்க்கவே முடியாது. ஒரு வசனத்தைக் கூட மாற்ற அவர் முன்வர மாட்டார். அப்படி பெர்ஃபெக்ட்டான ஸ்கிரிப்ட்டோடு தான் அவர் படப்பிடிப்புக்கே வருவார். நாம் கனவில் கூட கண்டிராத, வித்தியாசமான சில விஷயங்கள் அவர் தனது ஸ்கிரிப்ட்டில் அமைத்திருப்பார். மொத்தத்தில் ‘ஐ’ உங்களுக்கு நிறைய ஆச்சரியங்களை தர காத்திருக்கிறது’’ என்றார் இன்று கேரளா - கொச்சியில் நடந்த ‘ஐ’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விக்ரம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;