திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த த்ரிஷா!

திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த த்ரிஷா!

செய்திகள் 7-Jan-2015 3:34 PM IST Chandru கருத்துக்கள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கும் ‘ரேடியன்ஸ் மீடியா’ தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் விரைவில் திருமணம் என செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. ஆனால் நடிகை த்ரிஷாவோ ‘‘என் திருமணம் குறித்த செய்திகளை நானே வெளியிடுவேன்... அதுவரை பொறுத்திருங்கள்’’ என அப்போதைக்கு அந்த செய்திக்கு கமா போட்டு வைத்தார். இப்போது மீண்டும் அந்த செய்தி கடந்த ஒருசில நாட்களாக மீடியாக்களில் இடம்பிடித்திருக்கிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தோடு நடிகை த்ரிஷா சினிமாவிற்கு ‘குட்பை’ சொல்கிறார் எனவும், வருண் மணியனை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணமிருந்தன.

தற்போது இந்த செய்திகள் குறித்து நடிகை த்ரிஷாவே தனது ட்வீட்கள் மூலம் பதிலளித்திருக்கிறார். அதில், ‘‘வரும் 23ஆம் தேதி எனக்கும், வருணுக்கும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது என்பதை என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எங்கள் திருமண தேதியை நாங்களே இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குள் நீங்களாகவே எதையும் தயவுசெய்து பரப்பாதீர்கள். என் சம்பந்தப்பட்ட விஷயங்களை நானே முதல் ஆளாக உங்களுக்கு எப்போதும்போல் தெரிவிப்பேன். அதேபோல் சினிமாவிற்கு முழுக்குப்போடும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை. சொல்லப்போனால் விரைவில் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவிருக்கிறேன். அதோடு இந்த ஆண்டு நான் நடித்திருக்கும் 4 படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன’’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;