கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியாகும் ‘ஐ’

கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியாகும் ‘ஐ’

செய்திகள் 7-Jan-2015 3:14 PM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ஷங்கர், விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 650 மெற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் மிகப் பெரிய அளவில் ரிலீசாகவிருக்கும் ‘ஐ’ கேரளாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருக்கிறதாம். இப்படத்தின் கேரள வியோக உரிமையை ‘குளோபல் யுனைடெட் மீடியா’ என்றா நிறுவனம் 6 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ’எந்திரன்’ படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் மீதும் அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;