3 ஹிட் படங்கள் கொடுத்த ‘டார்லிங்’ நாயகி!

3 ஹிட் படங்கள் கொடுத்த ‘டார்லிங்’ நாயகி!

செய்திகள் 7-Jan-2015 1:24 PM IST VRC கருத்துக்கள்

பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கும் ‘டார்லிங்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவர், ‘1983’ என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமான ‘1983’ சூப்பர் ஹிட்! இதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஓம் சாந்தி ஓசானா’, ‘வெள்ளி மூங்கா’ மலையாள படங்களும் சூப்பர் ஹிட்! இந்த மூன்று படங்களும் ஹிட் ஆனதை தொடர்ந்து மலையாள சினிமாவின் ராசியான நடிகையாகி விட்டார் நிக்கி! தற்போது ‘மரியாத ராமன்’, ‘ஒரு செகன்ட் கிளாஸ் யாத்ரா’, ‘ருத்ரசிம்ஹாசனம்’ என மூன்று மலையாள படங்களில் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி! அத்துடன் தமிழில் நடித்துள்ள ‘டார்லிங்’ விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில் ‘யாகவராயினும் நா காக்கா’ என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் நிக்கி, ‘டார்லிங்’ படம் மூலம் தமிழிலும் ஹிட் அடிப்பார் என்று எதிர்பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;