விக்ரம், அஜித் படங்களுக்கு நடுவே களமிறங்கும் ஆரி!

விக்ரம், அஜித் படங்களுக்கு நடுவே களமிறங்கும் ஆரி!

செய்திகள் 7-Jan-2015 12:57 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடம் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரி தற்போது ‘கடை எண் 6’, ‘மானே தேனே பேயே’, ‘தரணி’, நயன்தாரவுடன் ‘மாயா’ என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் தரணி படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குகன் சம்பந்தம் இயக்கத்தில் ‘மெலடி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் ‘தரணி’ படத்தை ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம் 23ம் தேதி வெளியிடுகிறது. பொங்கலை முன்னிட்டு ‘ஐ’ படம் 14ஆம் தேதியும், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் 29ஆம் தேதியும் வெளிவரவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுமே பெரும்பாலான திரையரங்குகளை ஆக்ரமித்துக்கொள்ளும் என்ற நிலையிலும், கதையின் மேல் உள்ள நம்பிக்கையில் இப்படத்தை இந்த இரண்டு படங்களுக்கும் நடுவில் களமிறக்குகிறது ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;