ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் வைபவ்!

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் வைபவ்!

செய்திகள் 7-Jan-2015 12:44 PM IST VRC கருத்துக்கள்

இரண்டு, மூன்று ஹீரோக்கள் கதைகளில் ஒரு ஹீரோவாக நடித்து வந்த வைபவ், தனி ஹீரோவாக நடித்து சமீபத்தில் ரிலீசான படம் ‘கப்பல்’. இப்படம் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் வைபவ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் எஸ்.கே.ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்குகிறார். தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ஸ்ரீகாந்த நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ உட்பட பல படங்களை இயக்கியவர் ஸ்டான்லி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. ‘கப்பல்’ படத்தை தொடர்ந்து பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள விஷாலின் ‘ஆம்பள’ படத்திலும் நடித்துள்ளார் வைபவ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;