‘‘கமல் சார் எனக்கு குரு!’’ - ‘கயல்’ சந்திரன்

‘‘கமல் சார் எனக்கு குரு!’’ - ‘கயல்’ சந்திரன்

கட்டுரை 7-Jan-2015 12:24 PM IST VRC கருத்துக்கள்

‘‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான்! மைலாப்பூரிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் டிகிரி முடிச்சு, டெல்லியில் போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணேன். ஸ்கூல், காலேஜுல படிக்கும்போதே நிறைய குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு நடிப்புன்னா அப்படி ஒரு ஆர்வம்! படம் பார்க்கிறதுதான் என் வேலையே! அதிலும் கமல் சார் நடிச்ச படங்கள்னா சொல்லவே வேணாம். நடிப்புல அவர்தான் எனக்கு குரு! ஒரு நாள் பிரபுசாலமன் இயக்கும் படத்துக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டு போனேன். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த ஆடிஷனுக்கு வந்திருந்ததா கேள்விப்பட்டேன். நானும் போனேன்! கடைசியில நான் தேர்வாயிட்டேன்’’ என்கிறார் சமீபத்தில் திரைக்கு வந்து பாராட்டுக்களை குவித்துக் கொண்டிருக்கும் ‘கயல்’ படத்தின் ஹீரோ சந்திரன்.

‘‘கயல் படத்துக்காக எந்தெந்த ஊருக்கெல்லாம் போனீங்க?’’ என்று கேட்டதும்,
‘‘அது ஒரு ஜாலியான த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ்! முதல்ல சென்னை அடுத்த பொன்னேரியில் செட் போட்டு சில காட்சிகளை எடுத்தாங்க! அதுக்கப்புறம் காஷ்மீர்ல லே, லடாக், அப்புறம் அஜ்மீர், புஷ்கர், ராஜஸ்தான்ல ஜெய்ப்பூர், ஜோத்பூர், அதுக்கப்புறம் மேகாலயாவில் சிரபுஞ்சி, ஷில்லாங், இந்தியா - பங்களாதேஷ் பார்டர், அதுக்கப்புறம் கன்னியாகுமாரி, மூணார், வல்லக்கோட்டை என கிட்டத்தட்ட இந்தியா முழுக்க சுத்தியாச்சு!’’

‘‘கயல் தந்த அனுபவங்களை சொல்லுங்களேன்...’’
ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது! யாரும் ஒரு புது பையன், மூவி ஆட்கள் என்றில்லாமல் அந்த ஊருக்கு வந்த விசிட்டர்ஸ் மாதிரிதான் ட்ரீட் பண்ணினாங்க! நானும் என்கூட நடிச்ச வின்சென்டும் அந்த ஊர்ல யாராவது அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாங்கன்னா நாங்க போயிட்டு வருவோம். அந்த அளவுக்கு எல்லாரும் ஃப்ரெண்ட்லியா இருந்து எங்களை கவனிச்சாங்க. ஒவ்வொரு ஊருக்கு போய் வந்ததையும் என்னால மறக்கவே முடியாது!

படத்துல கயலை பார்த்ததும் காதல் வர்ற மாதிரி உங்கள் ரியல் லைஃப்ல காதல் வந்திருக்கா?
ஒரு பொண்ணை பார்த்ததும் உடனே காதல் வர்றதுங்கிறது படத்துல ஒகே! அது மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்கிறதுக்கு வாய்ப்பு இல்லியே? ஒரு பொண்ணை பார்க்கணும், அவளை நமக்கு புடிக்கணும், அவளுக்கு நம்மை புடிக்கணும் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு இல்லீயா? ஆனா நிறைய பெண்களை பார்க்கும்போது நமக்கு பிடிக்கும்! ஆனா எல்லாரையும் காதலிக்க முடியாது இல்லீயா? என்னை பொறுத்தவரைக்கும் பெண் என்றாலே அழகுதான்! ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்துல அழகாகதான் இருப்பாங்க!

‘கயல்’ படத்தை பார்த்து உங்களை பாராட்டிய வி.ஐ.பி.க்கள்?
சிவகார்த்திகேயனும், விமலும் பாராட்டியதை என்னால மறக்க முடியாது. காரணம் நானும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து ஆரம்பத்துல ஷார்ட் ஃபிலிம் எல்லாம் பண்ணியிருக்கோம். நல்ல ஒரு கம்பெனி மூலம், நல்ல ஒரு இயக்குனர் படத்துல, சரியான நேரத்துல நீ அறிமுகமாகியிருக்கேன்னு அவங்க மனதாரா பாராட்டியபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்! இதுதவிர படத்தை பார்த்து தினம் தினம் நிறைய ரசிகர்களும் பாராட்டு தெரிவிச்சுகிட்டிருக்காங்க.

அடுத்தது?
‘‘நிறைய பேர் அப்ரோச் பண்ணினாங்க! ஆனா அடுத்த படமும் பிரபு சாலமன் சாரோட கம்பெனிக்குதான் பண்றேன். ஆனா இயக்குனர் யார்? என்ன மாதிரி கதை? என்பதெல்லாம் இன்னும் முடிவாகல. முடிவானதும் உங்களுக்குச் சொல்றேன்’’ என்ற சந்திரனின் கண்களில் வெற்றிக்கான வெளிச்சம் பளிச்சிட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;