7 நாளில் அஜித் 30, 20 நாளில் விக்ரம் 60

7 நாளில் அஜித் 30, 20 நாளில் விக்ரம் 60

செய்திகள் 7-Jan-2015 11:40 AM IST Chandru கருத்துக்கள்

2015ஆம் வருடத்தின் முதல் மாதத்தில் வெளியாகவிருக்கும் விக்ரமின் ‘ஐ’ படமும், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படமும்தான் தற்போது சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்கள். ‘ஐ’ வரும் 14ஆம் தேதியும், ‘என்னை அறிந்தால்’ 29ஆம் தேதியும் திரைக்கு வருகிறது.

இது ஒருபுறமிருக்க கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ‘ஐ’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டீஸரைப்போலவே டிரைலருக்கும் பலத்த வரவேற்பு கிடைத்ததால் தற்போது 20 நாட்கள் ஆனநிலையில் 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது இந்த டிரைலர். அதோடு 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை ‘லைக்’கும் செய்திருக்கிறார்கள். ‘ஐ’ டீஸரை இதுவரை 96 லட்சம் பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதுவே தென்னிந்திய சினிமாவின் அதிகபட்ச பார்வையாளர்கள் எண்ணிக்கையை கொண்ட டீஸர்.

அதேபோல் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டிரைலர் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனால் வெளியாகி 7 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்த டிரைலரை கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் பார்வையிட்டும், 57 ஆயிரம் பேர் ‘லைக்’ செய்தும் இருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ டீஸரை இதுவரை 48 லட்சம் பேர் பார்வையிட்டும், 91 ஆயிரம் பேர் ‘லைக்’ செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே தென்னிந்திய சினிமாவில் அதிகபட்ச ‘லைக்’கைப் பெற்ற டீஸர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;