ஜில்லா, ஜிகர்தண்டா, கத்தி, லிங்கா... இப்போது ‘ஐ’

ஜில்லா, ஜிகர்தண்டா, கத்தி, லிங்கா... இப்போது ‘ஐ’

செய்திகள் 7-Jan-2015 11:30 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கரின் பிரம்மாண்டத்தில் விக்ரம் மிரட்டியிருக்கும் ‘ஐ’ படம் வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் 14ஆம் தேதி 650க்கும் அதிகமான திரையரங்குகளிலும், 15ஆம் தேதி முதல் ஆம்பள, டார்லிங் படங்களும் ரிலீஸாவதால் 400+ திரையரங்குகளிலும் ‘ஐ’ படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘ஐ’ படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது என்ற தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஐ’ படம் சென்சாருக்குச் சென்றது. அதில் யு/ஏ வாங்கிய இப்படம், ‘யு’ கிடைப்பதற்காக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடனே வெளியிடப்போவதாகவும், படத்தின் நீளம் 3 மணி 8 நிமிடங்கள் எனவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கடந்த வருடம் வெளிவந்த ஜில்லா, ஜிகர்தண்டா, கத்தி, லிங்கா படங்களும் இதேபோல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படங்களாகவே இருந்தன. ஆனால் மேற்கண்ட படங்களின் நீளமே அப்படங்களுக்கு சிறு பின்னடைவாக அமைந்ததையும் மறுக்க முடியாது. இருந்தபோதிலும் ‘ஐ’ ஷங்கர் படம் என்பதால் 3 மணி நேரம் ரசிகனைக் கட்டிப்போடக்கூடிய காட்சிகளை அவர் படத்தில் கண்டிப்பாக வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;