உதயநிதியை இயக்கும் ஷங்கர் அசிஸ்டென்ட்!

உதயநிதியை இயக்கும் ஷங்கர் அசிஸ்டென்ட்!

செய்திகள் 7-Jan-2015 11:05 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘கப்பல்’ திரைப்படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ள கார்த்திக் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து விட்டார்! சமீபத்தில் அவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லியிருக்கிறார் என்றும், அது உதயநிதிக்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து படம் பண்ண ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உதயநிதி தற்போது நடித்து வரும் ‘நண்பேன்டா’ படத்தை தொடர்ந்து ‘இதயம் முரளி’ மற்றும் திருக்குமரனின் ’கெத்து’ ஆகிய படங்களில் நடிக்க இருப்பதால அந்தப் படங்கள் முடிந்த பிறகே கார்த்திக் இயக்கும் படத்தை துவங்குவார்களாம். கார்த்திக் இயக்குனர் ஷங்கரிடம் அசிஸ்டென்டாக பணிபுரிந்தவராவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கூன் - டிரைலர்


;