தனுஷ், அமிதாப் இடையே ‘நீயா நானா’ போட்டி!

தனுஷ், அமிதாப் இடையே ‘நீயா நானா’ போட்டி!

செய்திகள் 7-Jan-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று (ஜனவரி 6) தனுஷ், அமிதாப் பச்சன் நடித்திருக்கும் ‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர் வெளியிடப்பட்டது. ‘பா’ பட கூட்டணியான பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் ‘கமிட்’டானபோது அவருக்கு வித்தியாசமான மாற்றுத் திறனாளி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டது. அதேபோல், அமிதாப்பிற்கும் தனுஷிற்கும் இடையே நடக்கும் ‘ஈகோ’ பிரச்சனைதான் இப்படத்தின் மையக்கரு என்றும் கூறப்பட்டது. தற்போது வெளிவந்திருக்கும் ‘ஷமிதாப்’பின் டிரைலரைப் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அது உறுதியாகியிருப்பது புரியவரும். தனுஷிற்கும், நடிகை அக்ஷராவுக்கும் இந்த டிரைலரில் எந்த டயலாக்கும் இல்லை. வெறும் சைகை மட்டுமே செய்கிறார் தனுஷ். அதோடு டிரைலர் முழுக்க அமிதாப் மட்டுமே பேசியிருக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் காது கேட்கும் தன்மையில்லாதவராகவும், வாய் பேசமுடியாதவராகவும் நடித்திருக்கிறார் என்றும், சினிமா கனவுகளோடு இருக்கும் அவர் அமிதாப்பின் பின்னணி குரலைப் பயன்படுத்தி திரையுலகில் ஜெயிக்கிறார் என்றும், புகழின் உச்சிக்கு சென்ற பிறகு இருவருக்கும் இடையே இந்த வெற்றிக்குக் காரணம் ‘நீயா நானா’ என்ற ஈகோ பிரச்சனை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் நல்ல தோழியாக அறிமுகமாகும் அக்ஷரா இருவரையும் இணைக்கும் பாலமாக இருப்பதுபோன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இது உண்மையா இல்லையா என்பது ‘ஷமிதாப்’ ரிலீஸாகும் பிப்ரவரி 6ஆம் தேதி தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;