பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 7-Jan-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

விஜய் இயக்கத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’, சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து பாபி சிம்ஹாவுடனும் ஜோடியாக நடிக்கிறார். மனோபாலாவும், திருமதி ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தில் பாபி சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், ஒரு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்போது 3 தமிழ் படங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;