‘ஆம்பள’ படத்திற்கு அனைவருக்கும் அனுமதி!

‘ஆம்பள’ படத்திற்கு அனைவருக்கும் அனுமதி!

செய்திகள் 7-Jan-2015 10:03 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சியின் இயக்கத்தில் மூன்று டஜன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் ‘ஆம்பள’ படம் பொங்கல் ரிலீஸிற்காக பரபர வேலைகளில் பிஸியாக இருக்கிறது. நேற்று இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர், இப்படம் அனைவரும் பார்ப்பதற்கு ஏற்ற படம் (யு சான்றிதழ்) என தணிக்கை அதிகாரிகளால் சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை படத்தின் நாயகன் விஷால் தயாரித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், வைபவ், சதீஷ், சந்தானம் என ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;