ரஜினி 25, சிபிராஜ் 50, விஜய் 75

ரஜினி 25, சிபிராஜ் 50, விஜய் 75

செய்திகள் 6-Jan-2015 11:23 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடத்தில் வெளியான படங்களில் ரஜினியின் ‘லிங்கா’, சிபிராஜின் ‘நாய்கள் ஜாக்கிரதை’, விஜய்யின் ‘கத்தி’ ஆகிய படங்கள் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கின்றன.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ‘லிங்கா’ படம், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியானது. எப்போதும்போலவே ரஜினியின் படங்களுக்கு இருக்கும் ‘மாஸ்’ ஓபனிங் இப்படத்திற்கும் கிடைத்திருந்தாலும், விமர்சனங்கள் மட்டும் கொஞ்சம் எதிர்மறையாக அமைந்தன. இருந்தபோதும், ரஜினி படம் என்பதால் இப்படம் 25 நாட்களைக் கடந்தும் இன்னும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வருடத்தில் வெளியான படங்களில் போகிறபோக்கில் வசூலை வாரிக்குவித்த படமென்றால் அது சிபிராஜின் ‘நாய்கள் ஜாக்கிரதை’தான். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தை சிபிராஜே தயாரித்தார். திரைக்கதையில் ஹீரோவுக்கு இணையாக நாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால், திரையரங்குளுக்கு குழந்தைகள் படையெடுத்து வந்தனர். இப்படம் வெளிவந்து 50 நாட்களாகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே படமும் வசூலில் பெரிய அளவில் சாதித்தது. ‘கத்தி’ படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;