பொங்கல் ரேஸில் டார்லிங்! - அதிகாரபூர்வ அறிவிப்பு

பொங்கல் ரேஸில் டார்லிங்! - அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 6-Jan-2015 10:37 AM IST Top 10 கருத்துக்கள்

இந்த பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி ஷங்கரின் ‘ஐ’யும், 15ஆம் தேதி விஷாலின் ‘ஆம்பள’ படமும் ரிலீஸாவது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டார்லிங், காக்கி சட்டை போன்ற படங்கள் பொங்கல் ரேஸில் இணையலாம் என்ற செய்தி கடந்த ஒரு சில நாட்களாக செய்திகளில் அடிபட்டு வந்தன.

இந்நிலையில் வரும் 15ஆம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘டார்லிங்’ படம் ரிலீஸாவது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படம் ‘பிரேம கதா சரித்திரம்’ தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். நாயகியாக நிக்கி கல்ரானி நடிக்கும் இப்படத்தில் கருணாஸ், பால சரவணன், ‘மொட்டை’ ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை சாம் ஆன்டன் இயக்கியிருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை இப்படம் சென்சாருக்குச் செல்லவிருக்கிறது. ஹாரர், ஹியூமர் என இரண்டுக்கும் உத்திரவாதமளிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் 150 திரையரங்குகளில் வெளியிடவிருக்கிறது ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;