அன்புப் பாதையில் பயணித்து ஜெயித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

அன்புப் பாதையில் பயணித்து ஜெயித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 6-Jan-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

‘‘என் முன்னே இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று கோபப் பாதை. இன்னொன்று அன்புப் பாதை. நான் அன்புப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கே நிற்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே’’ & இது இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் மிகப்பணிவாக உதிர்த்த வார்த்தைகள். ஆனால், இந்த வார்த்தைகளுக்குள் புதைந்துகிடக்கும் ஆயிரம் அர்த்தங்கள், இளைஞர்கள் ஒவ்வொருவரும் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தின.

ஏ.ஆர்.ரஹ்மான் பல சாதனைகள் படைத்த ஒரு இசையமைப்பாளர் மட்டுமில்லை. அவர் ஒரு முன்னுதாரணம். வெற்றியை எப்படிக் கையாள வேண்டும் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியவர். எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் வந்த பாதையை மறக்காதவர். அதனால்தான் இன்றும் இந்திய இளைஞர்களின் ‘இன்ஸ்பிரேஷனா’க இருக்கிறார் ரஹ்மான்.

இன்று (ஜனவரி 6) அவரின் பிறந்தநாள். உலக அரங்கில் இந்திய சினிமாவின், குறிப்பாக தமிழ் சினிமாவின் வளர்ச்சியைப் பறைசாற்றிய ரஹ்மானுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;