தெலுங்கு ‘சூதுகவ்வும்’ படத்தில் அனுஷ்காவுக்கு சிலை!

தெலுங்கு ‘சூதுகவ்வும்’ படத்தில் அனுஷ்காவுக்கு சிலை!

செய்திகள் 6-Jan-2015 9:51 AM IST Chandru கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘சூது கவ்வும்’ படம் தமிழில் பலராலும் பாராட்டப்பட்டு வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றது. தமிழில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ‘கடம் கேங்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சந்தோஷ் இயக்கும் இப்படத்தில், ஹீரோவாக நடித்து வருகிறார் டாக்டர் ராஜசேகர்.

‘சூது கவ்வும்’ படத்தில் பாபி சிம்ஹா நடிகை நயன்தாராவின் மிகப்பெரிய ரசிகனாக நடித்திருப்பார். அதற்காக தனது கிராமத்தில் நிதி திரட்டி நயன்தாராவுக்கு சிலை ஒன்றையும் திறந்து, ஊர்மக்களிடம் அடிபட்டு சென்னைக்கு வருபவராக நடித்திருப்பார். இந்த காட்சிக்கு தெலுங்கில் எந்த நடிகையின் சிலையை பயன்படுத்தலாம் என ராஜசேகர் டீம் யோசித்தபோது, தற்போது தெலுங்கில் மிகப்பிரபலமாக இருப்பவர் நடிகை அனுஷ்காவே என்ற முடிவுக்கு வந்தனராம். இதனால் அனுஷ்காவுக்கு சிலை வைப்பது போன்ற காட்சியை எடுப்பதற்கு தயாராகி வருகிறதாம் ‘கடம் கேங்’ டீம். ஆனால், இன்னும் இந்த சிலை மேட்டருக்காக அனுஷ்காவிடமிருந்து அனுமதி வரவில்லையாம். வந்ததும் அனுஷ்காவிற்கு சிலை வைக்கும் ஏற்பாடுகள் தொடங்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;