ஹைதராபாத்தில் கைகோர்க்கும் விஷால் - காஜல் அகர்வால்

ஹைதராபாத்தில் கைகோர்க்கும் விஷால் - காஜல் அகர்வால்

செய்திகள் 6-Jan-2015 9:22 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆம்பள’ படத்தின் டப்பிங், சென்சார், புரமோஷன் வேலைகளில் படுபிஸியாக இயங்கி வருகிறார் விஷால். இப்படம் உலகமெங்கும் வரும் 15ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ‘பாண்டியநாடு’ சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். இதில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தற்போது தனுஷுடன் ‘மாரி’ படப்பிடிப்பில் நடித்து வரும் காஜல் அகர்வால், ஜனவரி 13ஆம் தேதி முதல் சுசீந்திரன் இயக்கும் படத்திற்காக விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் துவங்குகிறது.

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சம்க்ருதி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்திலிருக்கின்றன. ஒரு சில நாட்களில் இதன் வேலைகளை முடித்துவிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் விஷால் படத்தை இயக்க வருகிறார் சுசீந்திரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;