கோடைவிடுமுறையின் முதல் கொண்டாட்டம் ‘நண்பேன்டா’

கோடைவிடுமுறையின் முதல் கொண்டாட்டம் ‘நண்பேன்டா’

செய்திகள் 6-Jan-2015 9:14 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ‘நண்பேன்டா’. வழக்கம்போல் இப்படத்திலும் சந்தானத்துடன் கூட்டணி அமைத்திருக்கும் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். நெகட்டிவ் ரோல் ஒன்றில் நடித்திருக்கிறார் ‘ஆபீஸ்’ சீரியல் புகழ் சூசன். சிறப்பத் தோற்றம் ஒன்றில் நடிகை தமன்னாவும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரொமான்ஸ் காமெடி படத்தை ஜெகதீஷ் இயக்க, இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரின் இசையமைப்பில் வெளியான பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு படத்தின் டிரைலரும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் முக்கிய வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்கு ரெடியாக இருந்தாலும், அடுத்தடுத்து வரிசையாக பல பெரிய படங்கள் ரிலீஸாகவிருப்பதால், இப்படத்தை கோடைவிடுமுறையில் முதல் படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காமெடிப் படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;