விஜய் 2 லட்சம்! சிவகார்த்திகேயன் 1 லட்சம்!

விஜய் 2 லட்சம்! சிவகார்த்திகேயன் 1 லட்சம்!

செய்திகள் 5-Jan-2015 4:05 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் பாலா என்ற ஒரு குழந்தை எலும்பு தொடர்பான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 20 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் நிதி உதவி அளிக்குமாறு கோரியும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது. அத்துடன் Help Baby Bala – Bone Marrow Transplantation Operation என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டு, அக்குழந்தையின் புகைப்படத்துடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை அறிந்த நடிகர் விஜய் உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார். அதுபோல இந்த குழ்நதைக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் உதவ முன்வந்து அவரும் ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து நிறைய பேர் அந்த குழந்தைக்கு நிதி உதவி வழங்க முன் வந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;