உண்மை சம்பவத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா!

உண்மை சம்பவத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா!

செய்திகள் 5-Jan-2015 2:29 PM IST VRC கருத்துக்கள்

‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்ற சொல்லுக்கு ஏற்ப பிழைப்புக்காக சென்னைக்கு வரும் சில இளைஞர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. ‘கரியாம்பட்டி ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன் இயக்குகிறார். ‘பாபி’ சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படத்தை சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படம் பிடித்து வருகிறார்கள்.

“ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட அறைகளின் விஸ்தாரத்தில் கனவு காணும் பேச்சுலர் இளைஞர்களின் கதைதான் இப்படம். எனது வாழ்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை கோர்வையும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது’’ என்கிறார் இப்படத்தை இயக்கி வரும் மருதுபாண்டியன். இப்படத்தை இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறது இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;