தொடங்கியது விஜய் சேதுபதியின் ‘மேற்கு தொடர்ச்சி மலை’

தொடங்கியது விஜய் சேதுபதியின் ‘மேற்கு தொடர்ச்சி மலை’

செய்திகள் 5-Jan-2015 12:14 PM IST Chandru கருத்துக்கள்

மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், நானும் ரௌடிதான் என ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி இன்னொருபுறம் தயாரிப்பு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேற்கண்ட படங்களில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தன் சொந்த கம்பெனியான ‘விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கும் விஜய்சேதுபதி, அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

சுசீந்திரனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய லெனின் பாரதி இயக்கும் இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் ‘தரமணி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஈஷ்வர். மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் Oxygen பாடல் ப்ரோமோ


;