சன்னி லியோனை தொடர்ந்து பூனம் பாண்டே!

சன்னி லியோனை தொடர்ந்து  பூனம் பாண்டே!

செய்திகள் 5-Jan-2015 12:05 PM IST VRC கருத்துக்கள்

‘கிங்ஸ் என்டர்பிரைசஸ்’ மற்றும் ‘டி.ஜி போஸ்ட்’ பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘மைதிலி & கோ’. இப்படத்தில் கதையின் நாயகியாக பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நடிக்கிறார். இவர் 2011-ல் நடை பெற்ற உலக்கோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இப்படத்தில் பாண்டியராஜன், சுமன், ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு வில்லனாக நடித்த ஜாகீர் உசேன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை இசை அமைத்து இயக்கும் வீரு.கே படம் குறித்து கூறும்போது,

‘‘ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட படம் இது. சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும். ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்த படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நாயகியை மையப்படுத்தி முழுக்க முழுக்க கதை உருவாகப்பட்டுள்ளது.

நாயகி இருக்கும் ஊரில் தீவிரவாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள். இது அறிந்த நாயகி அவர்களுடன் மோதி இறுதியில் அந்த திட்டத்தை முரியடித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இப்படத்திற்காக அதிரடியாக ஐந்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஜெர்மன், மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது’’ என்றார் இயக்குனர்.

‘வடகறி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை தொடர்ந்து இப்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டேயும் தமிழில் அறிமுகமாகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்


;