ட்விட்டர் டிரென்டில் இணைந்த சூர்யா ரசிகர்கள்!

ட்விட்டர் டிரென்டில் இணைந்த சூர்யா ரசிகர்கள்!

செய்திகள் 5-Jan-2015 11:44 AM IST Top 10 கருத்துக்கள்

ட்விட்டரைப் பொறுத்தவரை அஜித், விஜய் ரசிகர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். நேற்று விஜய் படத்தின் ‘புலி’ பட டைட்டில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அதை இந்திய அளவில் டிரென்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இன்னொருபுறம் ‘என்னை அறிந்தால்’ டிரைலர் வெளியாகி, அதற்குக் கிடைத்த வரவேற்பை #PulsatingYennaiArindhaalTrailer என்ற டேக் மூலம் அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் டிரென்ட் செய்து வருகிறார்கள்.

இவர்களோடு தற்போது சூர்யா ரசிகர்களும் இந்திய அளவிலான டிரென்டில் இணைந்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் #WaitingForMASSS என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரென்ட் செய்து வருகிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;