மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!

மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!

செய்திகள் 5-Jan-2015 11:39 AM IST VRC கருத்துக்கள்

‘ஜமுனா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். இவர்களுடன பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன் தேவிஸ்ரீ, சுரேகா, கோவை பானு ஆகியோரும் நடிகிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு ஆகிய பொறுப்புக்களை தஞ்சை.கே.சரவணன் ஏற்றுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி அவர் கூறும்போது,

‘‘இது முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காமெடி என்றால் இரைட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கிடையாது, கிளாமர் கிடையாது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். ஒரு கல்லூரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கிருந்த மாணவர்கள் காமெடி காட்சிகளை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால அந்த கல்லூரியே கலகலப்பாகிவிட்டது. இது எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றிதான். இப்படத்தை விரைவில் செய்ய இருக்கிறோம்’’ என்றார். இப்படத்திற்கு ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் பாதி மிருகம் பாதி - எனது உலகில் வீடியோ


;