‘ஐ’, ‘என்னை அறிந்தால்’ படங்களால் லேட்டாகும் ‘அனேகன்’

‘ஐ’, ‘என்னை அறிந்தால்’ படங்களால் லேட்டாகும் ‘அனேகன்’

செய்திகள் 5-Jan-2015 11:30 AM IST Chandru கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, படம் சென்சாரில் ‘யு’ சான்றிதழும் வாங்கிவிட்டது. பாடல்களும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. நான்கு வித தோற்றங்களில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் வெளிவந்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால், டிரைலர் எப்போது வெளியாகும்? படம் எப்போது ரிலீஸாகும்? என தனுஷ் ரசிகர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் கடந்த வருட தீபாவளிக்கே வெளியாகலாம் என்று சொல்லப்பட்டு வந்த ‘அனேகன்’ இப்போது பொங்கல் ரேஸில்கூட இல்லை. அதற்கு முதல் காரணம் ‘ஐ’ படத்தின் சென்னை, செங்கல்பட்டு உரிமையை ‘அனேகன்’ தயாரிப்பாளர்களான ‘ஏஜிஎஸ் நிறுவனத்தார்’தான் வாங்கியிருப்பதுதான். இதனால் ‘ஐ’ படம் வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகே ‘அனேகன்’ படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், டிரைலரையாவது கண்ணில் காட்டலாமே? என ஏங்கும் ரசிகர்களுக்கு கே.வி.ஆனந்தே தற்போது பதிலளித்திருக்கிறார்.

அதாவது ‘அனேகன்’ படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸும், எடிட்டிரான ஆண்டனியும்தான் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பணிபுரிகிறார்கள். ஜனவரி 29ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’ படத்தை வெளியிட வேண்டிய நிர்பந்தத்தில் அவர்கள் இருவரும் இருப்பதால் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படுபிஸியாக இருக்கிறார்கள். இதனால் ‘அனேகன்’ படத்தின் டிரைலரை தயார் செய்ய அவர்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்துள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த் ‘‘ஹாரிஸ், ஆண்டனி இருவரும் ‘என்னை அறிந்தால்’ படப்பணிகளில் பிஸியாக இருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும் நான் ஏற்கெனவே சொன்னதுபோல ‘அனேகன்’ டிரைலரை வரும் 7ஆம் தேதிக்குள் ரிலீஸ் செய்துவிடுவோம்!’’ என குறிப்பிட்டிருந்தார். தற்போது அனேகன் டிரைலர் ரெடியாகிவிட்டதாக இன்று மீண்டும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார் அவர். எனவே திட்டமிட்டபடி 7ஆம் தேதி ‘அனேகன்’ டிரைலரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;