கேரளா செல்லும் ‘ஆம்பள’ படக்குழுவினர்!

கேரளா செல்லும் ‘ஆம்பள’ படக்குழுவினர்!

செய்திகள் 5-Jan-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

தீபாவளிக்கு ‘பூஜை’ படத்தை தந்த விஷால், இந்த வருட பொங்கலுக்கு ‘ஆம்பள’யை தரவிருக்கிறார். சமீபகாலமாக ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு படங்களை தயாரித்து, நடித்து வரும் விஷால் சொன்னபடியே அப்படங்களை குறித்த தேதியில் ரிலீஸும் செய்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘ஆம்பள’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வார இறுதியில் ‘ஆம்பள’ சென்சாருக்கும் செல்லவிருக்கிறது. அத்துடன் படத்தின் விளம்பர வேலைகளிலும் படு பிசியாக இயங்கி வரும் விஷால், இப்படத்தின் புரொமோஷனுக்காக வருகிற 7-ஆம் தேதி தனது குழுவினருடன் கேரளா செல்லவும் இருக்கிறார்! விஷால் படங்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் வரவேற்பு இருப்பதைப் போல கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ‘ஆம்பள’யை புரொமோட் செய்யும் நோக்கத்துடன் கேரளா செல்ல இருக்கிறார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;