‘கோலிசோடா’ இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

‘கோலிசோடா’ இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

செய்திகள் 5-Jan-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

1998-ல் ‘நெஞ்சினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் விஜய் மில்டன். இந்தப் படத்தை தொடர்ந்து 20 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஜய் மில்டன் ‘அழ்காய இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார். ஆனால் ஒளிப்பதிவில் வெற்றி பெற்றவராய் விளங்கிய விஜய் மில்டனுக்கு இப்படம் இயக்குனர் என்ற முறையில் பெரிய வெற்றியை தரவில்லை! இருந்தாலும் விடாமுயற்சியாக இயக்குனராகவும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி, சின்ன பசங்களை வைத்து அவர் இயக்கிய ‘கோலிசோடா’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் விஜய் மில்டனுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலேயே ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்ரமை வைத்து ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கி வரும் விஜய் மிலடனுக்கு இன்று பிறந்த நாள்! ‘கோலிசோடா’வின் வெற்றியோடு, நட்சத்திர நடிகரான விக்ரமுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றி வரும் விஜய் மில்டனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;