விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா பரிசளித்த புலி!

விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா பரிசளித்த புலி!

செய்திகள் 5-Jan-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு ‘புலி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்திற்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது ‘புலி’என்ற டைட்டிலை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே ‘புலி’ என்ற டைட்டிலை இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா பதிவு செய்து வைத்திருந்தார். இந்த தலைப்பு தற்போது விஜய் நடித்து வரும் படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும் என்று கருதிய படக்குழுவினர், அந்த தலைப்பை விட்டுத்தரும்படி எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டுகொண்டுள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவும் தனக்கு விஜய் மீது இருக்கும் அன்பாலும், மரியாதையாலும் ‘புலி’ என்ற டைட்டிலை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

‘புலி’யின் கதை சரித்திர பின்னணி, இன்றைய காலகட்ட பின்னணி என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த செட்டில் இன்னும் ஒரு வாரகாலம் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து தலைக்கோணத்தில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். தொடர்ந்து படப்பிடிப்பு வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ புகழ் சுதீப், விஜயகுமார், தம்பி ராமையா, சத்தியன், கருணாஸ், வித்யூ ரேகா ராமன், நரேன், ஜோமல்லூரி, அஜய் ரத்தினம் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். ‘தமீன் ஃபிலிம்ஸ்’ ஷிபுவும், விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமாரும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;