மேலும் 100 தியேட்டர்களில் ‘வெள்ளக்காரதுரை’

மேலும் 100 தியேட்டர்களில் ‘வெள்ளக்காரதுரை’

செய்திகள் 5-Jan-2015 9:48 AM IST VRC கருத்துக்கள்

ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் தயாரித்து, எழில் இயக்கிய படம் ‘வெள்ளக்காரதுரை’. இப்படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று 200 திரையரங்குளில் வெளியாகி வெற்றி பெற்றது.

மக்களின் தொடர்ந்த அமோக வரவேற்பு காரணமாக இப்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் ‘வெள்ளக்காரதுரை’ திரையிடப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி முதலானோர் நடிப்பில் எழிலின் சிறந்த திரைகதையின் மூலம் படம் அணைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளது. தனது முதல் படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அன்புசெழியன் தனது ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பாக தொடர்ந்து நிறைய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;