விஜய்யின் ‘புலி’யில் ‘ஐ’ சென்டிமென்ட்!

விஜய்யின் ‘புலி’யில் ‘ஐ’ சென்டிமென்ட்!

செய்திகள் 5-Jan-2015 9:20 AM IST Chandru கருத்துக்கள்

முன்பெல்லாம் படத்திற்கு பையர் வைத்தபிறகுதான் பூஜையே போடுவார்கள். ஆனால் இப்போதோ, படம் முடியும் வரையில் பெயரை வைக்காமலேயே ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறார்கள். படத்தின் தலைப்பை வெளியிடாமல் விஜய் 58, அஜித் 55 என பெயர் வைத்துவிட்டு வேலைகளை தொடர்ந்து வருகிறார்கள். இதனால் படத்தின் பெயர் இதுவாக இருக்கும், அதுவாக இருக்கும் என ஆளாளுக்கு ஒரு செய்தியை பரப்பிவிட்டு ரசிகர்களை ‘மண்டை காய’ வைக்கிறார்கள். இது பெரும்பாலும் அஜித், விஜய் படங்களில்தான் அதிகமாக நடக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘விஜய் 58’ என வைத்து பாதி ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார்கள். அதற்குள் நமது ஆட்கள் படத்தின் பெயர் இதுவாகத்தான் இருக்கும் என ‘மாரீசன்’, ‘கருடா’ என பெயர் வைத்தார்கள். பின்னர் ‘புலி’யாக இருக்கலாம் என கடந்த ஒன்றிரண்டு நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. டைட்டிலை பொங்கலுக்கு அறிவிக்கப்போவதாக சொல்லிவந்த இப்பட நிறுவனம், திடீரென இப்படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் ‘புலி’தான் என தற்போது அறிவித்துவிட்டது.

விஜய்யின் 58 படங்களில் 18 படங்களின் பெயர்கள் ஆங்கில எழுத்தான 'I'யில் முடியும் வகையில் வைக்கப்பட்டுள்ளன, அதாவது Sendhoorapandi, Coimbatore Maapillai, Kadhalukku Mariyadhai, Ninaithen Vandhai, Kushi, Badri, Bhagavathi, Puthiya Geethai, Thirumalai, Ghilli, Thirupachi, Sivakasi, Aadhi, Pokkiri, Kuruvi, Thuppakki, Kaththi, Puli போன்ற படங்கள் 'I'யில் முடிகின்றன. இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அவரின் பெரும்பாலான வெற்றிப்படங்கள் 'I' என்ற ஆங்கில எழுத்தில் முடிந்திருப்பதால் அதே சென்டிமென்டை வைத்தும் Puli என்ற டைட்டிலை வைத்திருக்கலாம் என்கிறார்கள். விதிவிலக்காக இந்த பட்டியலில் ஒரு சில ஆவேரேஜ் படங்களும், ஒன்றிரண்டு தோல்விப் படங்களும் இருக்கின்றன. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது ‘ஐ’ எழுத்தில் முடிவது விஜய்க்கு ராசியாகவே பார்க்கப்படுகிறது. அந்த சென்டிமென்ட் ‘புலி’யிலும் தொடர்ந்தால் ஒரு சூப்பர்ஹிட் வெற்றி நிச்சயம் என்கிறது விஜய்யின் வட்டாரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இசை டிரைலர்


;