ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஜஸ்பா!

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஜஸ்பா!

செய்திகள் 3-Jan-2015 5:25 PM IST VRC கருத்துக்கள்

அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் அவருக்கு ஆராத்யா என்ற பெண் குழுந்தை பிறந்ததால் அதன் பிறகு அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக தன் கணவர், குழந்தை, குடும்பம் என்று இருந்து வந்தவர், இப்போது சஞ்சய் குப்தா இயக்கும் ‘ஜஸ்பா’ என்ற ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் மூன்று முக்கியமான கேர்கடர்கள் இருக்கிறதாம். அதில் ஒரு கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மும்பையில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்துடன் இந்தப் புத்தாண்டிலிருந்து தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;