‘லைக்’கில் மீண்டும் சாதனை படைத்த அஜித்!

‘லைக்’கில் மீண்டும் சாதனை படைத்த அஜித்!

செய்திகள் 3-Jan-2015 11:37 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் வெளிவந்தபோது அதனை உலகெங்கும் இருக்கும் ‘தல’ ரசிகர்கள் சரமாரியாக பார்த்தும், லைக் செய்தும் சாதனை படைத்தார்கள். அந்த டீஸரை மட்டும் இதுவரை 47 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்வையிட்டும், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்தும் இருக்கிறார்கள். ‘லைக்’கைப் பொறுத்தவரை இந்திய அளவில் 2வது இடத்திலிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ டீஸர். 1 லட்சம் ‘லைக்’குடன் முதலிடத்திலிருக்கிறது சல்மான் கானின் ‘கிக்’ டிரைலர்.

‘என்னை அறிந்தால்’ டீஸரைத் தொடர்ந்து தற்போது டிரைலரும் ‘லைக்’கில் சாதனை படைத்து வருகிறது. புத்தாண்டு அன்று அதிகாலை 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டிரைலரை இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டும், 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளார்கள். 60 மணி நேரத்திலேயே இந்த சாதனையை செய்திருக்கிறது இந்த டிரைலர். அதோடு இந்திய அளவில் யூ டியூப் டீஸர்/டிரைலர் லைக் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது இந்த டிரைலர். ‘டாப் 10’ பட்டியலில் இந்திய அளவில் ஐ, என்னை அறிந்தால் மட்டுமே தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா டீஸர்/டிரைலர் யு டியூப் ‘லைக்’கைப் பொறுத்தவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘லைக்’குகள் வாங்கியிருப்பது ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர், டிரைலர் மட்டுமே!

இந்திய அளவில் டீஸர்/டிரைலர் யு டியூப் சாதனைப் பட்டியல் :

1. Kick Trailer - 100K
2. Yennai Arindhaal Teaser - 91K
3. KRRISH 3 Trailer - 72K
4. BANG BANG! Teaser - 60K
5. R...Rajkumar - 59K
6. DHOOM 3 Trailer - 58K
7. DHOOM 3 Teaser - 56K
8. Yennai Arindhaal Trailer - 51K
9. I Trailer - 47 K
10. I Teaser - 45K

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;