ரஜினியின் ‘லிங்கா’ புதிய சாதனை!

ரஜினியின் ‘லிங்கா’ புதிய சாதனை!

செய்திகள் 3-Jan-2015 11:06 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியான ‘லிங்கா’ படம் தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வாரங்களுக்கும் மேலாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்திலிருக்கும் ‘லிங்கா’ புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, இதுவரை தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு படத்தின் டீஸர்/டிரைலரை யு டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சங்களைத் தொட்டது ஷங்கரின் ‘ஐ’ பட டீஸர்/டிரைலர் மட்டுமே. தற்போது வரை ‘ஐ’ டீஸரை 95 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், ‘ஐ’ டிரைலரை 58 லட்சத்திற்கு மேற்பட்டோரும் கண்டுகளித்துள்ளனர்.

‘ஐ’ படத்தைத் தொடர்ந்து ரஜினியின் ‘லிங்கா’வும் தற்போது 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த நவம்பர் 15ஆம் தேதி வெளியான ‘லிங்கா’ படத்தின் டிரைலரை இதுவரை 5,004,432 பார்வையிட்டிருக்கிறார்கள். இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதோடு தமிழ் சினிமா டீஸர்/டிரைலரின் யு டியூப் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் ‘ஐ’ டீஸர், ‘ஐ’ டிரைலரைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ‘லிங்கா’ டிரைலர்.

தமிழ் சினிமா டீஸர்/டிரைலர் சாதனைப் பட்டியல் :

1. I Teaser - 9.5M
2. I Trailer - 5.8M
3. Lingaa Trailer - 5.0M
4. Kochadaiiyaan Teaser - 4.8M
5. Yennai Arindhaal Teaser - 4.7M
6. Kochadaiiyaan Trailer - 4.6M
7. Lingaa Teaser - 4.3M
8. Anjaan Teaser - 3.6M
9. Thalaivaa Trailer - 3.4M
10. Kaththi Motion Poster - 3.0M

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;