விறுவிறு டப்பிங்கில் ஓகே கண்மணி!

விறுவிறு டப்பிங்கில் ஓகே கண்மணி!

செய்திகள் 3-Jan-2015 10:41 AM IST VRC கருத்துக்கள்

‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்திற்குள் நடத்தி முடித்துள்ளார்! துல்கர் சலமான், ப்ரியா ஆனந்த், பிரகாஷ் ராஜ், கனிஹா முதலானோர் நடிக்கும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக தன் படங்களுக்கு நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் மணிரத்னம் இப்படத்தை பொறுத்தவரையில் குறைந்த நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். ‘அலைபாயுதே’ படப் பாணியில் காதல் கதையாக உருவாகியிருப்பதாக சொல்லும் இப்படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றாலும் இதனை மணிரத்னம் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. டப்பிங் வேலைகள் முடிந்ததும் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைக்கிறார். ஒரு இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்துடன் இப்படத்தில் இணைந்து ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;