அஜித் பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் படம்!

அஜித் பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் படம்!

செய்திகள் 3-Jan-2015 10:28 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘காக்கிச் சட்டை’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்க, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. சிவகார்த்திகேயனின் ‘காக்கிச் சட்டை’ படத்தை தொடர்ந்து ‘ரஜினி முருகன்’ படத்தை அஜித்தின் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தினமான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;