‘என்னை அறிந்தால்’ டீஸரைத் தொடர்ந்து டிரைலரும் சாதனை!

‘என்னை அறிந்தால்’ டீஸரைத் தொடர்ந்து டிரைலரும் சாதனை!

செய்திகள் 2-Jan-2015 11:37 AM IST Chandru கருத்துக்கள்

புத்தாண்டை முன்னிட்டு சரியாக 12.01க்கு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே வெளியான ‘என்னை அறிந்தால்’ டீஸர், இதுரை 47 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டும், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டும் சாதனை படைத்திருந்தது. இப்போது வெளியாகியிருக்கும் டிரைலரை 34 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதோடு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளார்கள்.

டிரைலர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனை கண்டுகளித்தனர். அதோடு முதல் 20 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களை எட்டியது இந்த டிரைலர். அதோடு #Party2015WithYennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கையும் உலகளவில் டிரென்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள். யு டியூப் டிரைலர்/டீஸர் சாதனைகளைப் பொறுத்தவரை முதல் ஐந்து இடங்களை விக்ரம், ரஜினி, அஜித் ஆகியோரின் படங்களே ஆக்ரமித்துள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் இந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;