மகன் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

மகன் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

செய்திகள் 2-Jan-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘‘வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் நினைக்கும் காலம் இது. தங்களது திறமையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களை மையமாகக்கொண்ட படமாக உருவாகி வருகிறது ‘மூணே மூணு வார்த்தை’. அந்த இரண்டு இளைஞர்கள் வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும்போது அவர்கள் சந்திக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்லும் படம் இது’’ என்கிறார் இப்படத்தை இயக்கி வரும் மதுமிதா. ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கும் இப்படத்தை குறித்து இயக்குனர் மதுமிதா மேலும் கூறுகையில்,

“இப்படத்தில் அந்த இரண்டு இளைஞர்களாக அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’ புகழ் வெங்கி நடிக்கிறார்கள். இவர்களுடன் அதிதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.பி.பி.- லட்சுமி முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் இது. தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது இப்படம்!

சமீபமாக கல்லூரி மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் தங்களது ‘மூணே மூணு வார்த்தை’ அனுபவத்தை வீடியோ பதிவாக எங்களுக்கு அனுப்பினால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோக்கள் படத்தின் இறுதியில் காட்ட உள்ளோம். இவ்வீடியோ அவர்களின் காதல், கல்லூரி, நட்பு, நகைச்சுவை என அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை திரையுலகில் வாய்ப்புகள் அமைத்து தரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்கிறார் மதுமிதா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;