சத்தமில்லாமல் உருவாகும் ஜீவாவின் 2 படங்கள்!

சத்தமில்லாமல் உருவாகும் ஜீவாவின் 2 படங்கள்!

செய்திகள் 2-Jan-2015 10:29 AM IST Top 10 கருத்துக்கள்

‘யான்’ படத்தின் எதிர்மறையான ரிசல்ட்டுக்குப் பின்னர் ஜீவா வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை, ‘கமிட்’டாகவில்லை என்றொரு பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் சத்தமில்லாமல் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறதாம்.

தற்போது நயன்தாராவுடன் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜீவா. ராம்நாத் இயக்கும் இப்படம் ரொமான்டிக் காமெடி ரகமாம். ‘ஈ’ படத்தைத் தொடர்ந்து சுமார் 8 வருடங்களுக்கு பின் ஜீவாவும், நயன்தாராவும் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேக வேகமாக நடைபெற்று வருகிறதாம்.

இதனைத் தொடர்ந்து ‘சிவ மனசுல சக்தி’ படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படமொன்றிலும் ஜீவா நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். தற்போது ஆர்யா, தமன்னா நடிக்கும் ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ். இப்படம் முடிவடைந்ததும், வரும் ஏப்ரல் மாதம் ஜீவா நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். ராஜேஷ் சொன்ன ஸ்கிரிப்ட்டை ஏற்கெனவே ‘ஓகே’ செய்துவிட்டாராம் ஜீவா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;