இஸ்லாம் முறைப்படி யுவன் திருமணம்!

இஸ்லாம் முறைப்படி யுவன் திருமணம்!

செய்திகள் 2-Jan-2015 10:17 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு, அவர்களை விவாகரத்து செய்தவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஜப்ருன்னிஸா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. மிக ரகசியமாக நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து இப்போது இவர்கள் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. ஆங்கில புத்தாண்டான நேற்று கீழக்கரையில் இஸ்லாம் மதமுறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் யுவனுக்கு நெருக்கமான சிலர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;