‘ராவா’ படத்தில் பார்வையற்றவராக சமுத்திரக்கனி!

‘ராவா’ படத்தில் பார்வையற்றவராக சமுத்திரக்கனி!

செய்திகள் 2-Jan-2015 9:52 AM IST Chandru கருத்துக்கள்

‘சுப்ரமணியபுர’த்தில் வில்லன், ‘ஈசனி’ல் போலீஸ், ‘சாட்டை’யில் வாத்தியார், ‘வேலையில்லா பட்டதாரி’யில் பாசமுள்ள அப்பா, ‘காடு’ படத்தில் போராளி என படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பில் புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. தற்போது ‘கிட்ணா’ என்ற படத்தில் மலைவாழ் மனிதராக கதையின் நாயகனாக நடித்து வரும் இவர், அடுத்ததாக அன்பு இயக்கும் ‘ராவா’ படத்தில் நடிக்கிறார்.

நட்பையும், தன்னம்பிக்கையையும் மையமாக வைத்து உருவாக்கப்படம் இப்படத்தில் சமுத்திரக்கனி பார்வையற்றவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக சில நாட்கள் பார்வையற்றோர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் உடல்மொழியையும், முகபாவனைகளையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம் அவர். ‘ராவா’ படத்தில் ஜோதி பாசு என்ற கேரக்டர் பெயரில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. இப்படத்தில் ஹீரோவாக புதுமுகம் கோபியும், ஹீரோயினாக எஸ்.ஏ.சி. இயக்கும் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் நடிக்கும் பாப்ரி கோஷும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;