‘என்னை அறிந்தால்’ - டிரைலர் விமர்சனம்

‘என்னை அறிந்தால்’ - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 1-Jan-2015 7:10 PM IST Top 10 கருத்துக்கள்

அஜித் பட வரலாற்றிலேயே ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸருக்குதான் அதிகபட்ச வரவேற்பு கிடைத்தது. அதோடு தென்னிந்திய அளவில் அதிகம் பேர் பார்த்த 10 டீஸர்களில் இந்த டீஸரும் இடம்பிடித்தது. ‘லைக்’கில் இந்திய அளவில் 2வது இடத்தில் இருக்கிறது. இப்போது ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலரும் வெளியாகியிருக்கிறது. டீஸரைப் போல் இந்த டிரைலரும் மிரட்டியிருக்கிறதா?

டீஸரில் முழுக்க முழுக்க ‘தல’ மட்டுமே ஆக்ரமித்திருந்தார். இந்த டிரைலரில் அருண் விஜய், விவேக், த்ரிஷா, அனுஷ்கா, பேபி அங்கிதா, பார்வதி நாயர் என படத்தின் முக்கிய நட்சதிரங்கள் அனைவருக்குமே காட்சிகளைக் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ‘அதாரு அதாரு...’ பாடலின் பின்னணி இசையோடும், ஆரம்ப கோரஸோடும் வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறார்கள் இந்த டிரைலரை.

இந்த டிரைலரில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பல புதிய விஷயங்கள் ரசிகர்களுக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அஜித் தன்னை ‘சத்யதேவ்’ என அனுஷ்காவிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள, ‘கட்’ செய்தால் ‘ஹேமானிகா’ என அஜித்திடம் அறிமுகமாகிறார் த்ரிஷா. அதோடு ஃபாரின் ஃபைட்டர் ஒருவருடன் அஜித் மோதும் பாக்ஸிங் ஃபைட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ். ‘‘நீங்க ஏன் சார் இன்னும் கல்யாணம் பண்ணலை...?’’ என விவேக்கிடம் ஒருவர் கேட்க, ‘‘எனக்கு பேய்னா பயம்!’’ என சீரியஸ் சிரிப்பு வெடி கொளுத்தியிருக்கிறர் விவேக்.

‘ஆரண்யகாண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவும் இப்படத்தின் கதை இலாகாவில் இடம்பெற்றிருக்கிறார் என்பது ‘என்னை அறிந்தால்’ படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. டிரைலரின் கடைசி ஷாட்டில் ‘இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க நின்னா உன் தல இருக்காது’ என அஜித் ஒருவரைப் பார்த்து மிரட்டுகிறார். அனேகமாக அது இயக்குனர் அழகம்பெருமாளாக இருக்கலாம். அனுஷ்காவின் அட்டகாசமான புன்னகை, த்ரிஷாவின் ‘மாயா பஜார்’ ஆகியவையும் இந்த டிரைலரை கலர்ஃபுல்லாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் இந்த டிரைலர்... வழக்கமான அஜித் பட டிரைலரிலிருந்தும், வழக்கமான கௌதம் மேனன் ஸ்டைலிலிருந்தும் நிறையவே வித்தியாசமாக இருக்கிறது. ஓவர் பில்டப், பஞ்ச் டயலாக்கைக் குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘என்னை அறிந்தால்’ படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த டிரைலர் தருகிறது.

‘தல’ ரசிகர்களுக்கு உண்மையான புத்தாண்டு பரிசுதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;